மின்கம்பம் சரியில்லை ; எம்.எல்.ஏ அதிரடி ஆய்வு, உடனடி தீர்வு !

0
1

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்த காரணத்தினால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பழுதடைந்த மின்மாற்றியை பார்வையிட்டு. அப்பகுதியில் பல மின்கம்பங்கள் உடைந்து விழும் நிலையிலும், சாய்ந்தும் காணப்பட்டன.

2

4

இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் கூறினார். துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக அப்பகுதி மக்கள் எம் எல் ஏ இனிகோவிற்கு நன்றி தெரிவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்