ஓயாமரி சுடுகாட்டில் எம்எல்ஏ ஆய்வு ; பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு !

0
1

திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் தினமும் பல சடலங்கள் எடுக்கப்படுவதால் எரித்த சாம்பல்களை பெற ஒரு நாள் ஆகி விடுகிறது. அதோடு காத்திருப்போருக்கு சரியான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி எதுவும் இல்லை. மேலும் சுடுகாடு வளாகத்தில் சரியான பராமரிப்புகள் இல்லை என்று திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜிடம் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

 

திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் இன்று திடீர் ஆய்வு பணி மேற்கொண்டார் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ். அப்போது சுடுகாட்டில் உள்ள கழிப்பறைகள் சேதமடைந்தும், பழுதடைந்தும் இருப்பதைப் பார்த்து அதை உடனடியாக சரி செய்யவும், மற்றும் குடிநீர் வசதி அமைத்துத் தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2

மேலும் இது கொரோனா காலம் என்பதால் நோய் பரவலை கட்டுப்படுத்த வளாகத்தில் தினமும் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தப்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.தொடர்ந்து அனைவருக்கும் முகக் கவசம் வழங்கவும், வெப்பநிலை பரிசோதித்து உள்ளே அனுப்பவும் அறிவுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து ஓயாமரி சுடுகாட்டில் பழுதடைந்துள்ளது இரண்டாவது யூனிட்டை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

இறுதியாக ஓயாமரி சுடுகாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர் மேலும் அவர்களிடம் பேசிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், உங்கள் பணி ஒப்பற்ற பணி, அனைவருக்கும் இறுதி மரியாதை நீங்களே அளிக்கிறீர்கள் என்று பாராட்டினார்.

மேலும் கொரோனாவால் இருந்தவர்கள் உடலையும் மரியாதையோடு கையாண்டதற்காக பணியாளர்களை பாராட்டினார்.

அப்போது  சால்வை அணிவித்து பாராட்டியதால் பணியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இதைத்தொடர்ந்து சுடுகாட்டில் உடனடியாக வாகன கழிப்பிடம் அமைக்கப்பட்டது. மேலும் இரண்டாவது யூனிட் மாலை 6 மணிக்குள் சரியாகிவிடும் என்றும் அதிகாரிகள் எம்எல்ஏ விடம் உறுதியளித்துள்ளனர்.

வீட்டில் இருந்து உத்தரவு பிறப்பிக்காமல் களத்திற்கு வந்த ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. மற்றும் பணியாளர்களை பாராட்டியது இப்படியான எம்எல்ஏவின் செயல்பாடை பார்த்து மக்கள் பாராட்டு வியந்துபோனார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.