திருச்சி அமைச்சர் மீது அதிமுக மாவட்ட செயலாளர் ஆளுநரிடம் புகார் ; அமைச்சர் விளக்கம் !

0
1

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு அலுவலர்களை தனது கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் மீது முன்னாள் எம்பி ப. குமார் குற்றம்சாட்டி கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ப.குமார் கூறியது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 17ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் உள்ளிட்டோரை ஆதரவளித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். என்று கூறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை ; கடந்த 17ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்னை சந்தித்து வாழ்த்து கூற வந்திருந்தனர். அதே சமயத்தில் ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட நிர்வாகிகளும் என்னை சந்தித்து வாழ்த்து கூற வந்திருந்தார்கள்.

2

அப்போது அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த எண்ணி நாங்கள் ஆலோசித்துக் கொண்டோம் என்றார். மேலும் எந்த அதிகாரியும் நான் அலுவலகத்திற்கு வர வைக்கவில்லை என்றும் கூறி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.