துவாக்குடி ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்க விரைவாய் செயல்பட்ட அதிகாரிகள் !

0
1

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள புதுக்குடியில் இத்தாலியின் சால் என்ற இந்தியாவின் சிக்ஜில் நிறுவனம் 2014-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு காற்றிலிருந்து 20. 95 சதவீதம் ஆக்சிஜன், 78.9% நைட்ரஜன், 93% ஆர்கான் ஆகியவை பிரித்தெடுக்கப்படுகிறது.

இங்கு ஒரு நாளைக்கு 42 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மற்ற வாயுக்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 50 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்ட காரணத்தால் திருச்சி, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

2

மேலும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை தமிழக அரசிற்கு தெரியப்படுத்தினர். இதனால் தமிழக அரசு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அனுப்பி தற்காலிகமாக சீரமைக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் எந்திரம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிரந்தரமாக சரிசெய்ய ஒரு மாதத்திற்குள் பூனேயில் இருந்து புதிய பாகம் வந்தவுடன் செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.