திருச்சி அரிசி கடையில் திருடியவர்கள், சிசிடிவி காட்சி மூலம் கைது !

0
1

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தாரநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனபால். இவர் பெரிய கடைவீதியில் உள்ள வெள்ளை வெற்றிலைக்கார தெருவில் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.

2

இந்த நிலையில் அரிசி மண்டி 13-ஆம் தேதி மூடி விட்டு சென்றிருந்த நிலையில் அடுத்தநாள் வந்து திறக்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கடையில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரன், ஆனந்த், சிவக்குமார் ஆகிய 3 பேரும் சிசிடிவி காட்சிகளில் சிக்கினர்.
மேலும் அவர்கள் 3 பேரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்