வாய்க்காலை தூர்வார எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நடவடிக்கை !

0
1

திருச்சி வரகனேரி பகுதியிலுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர்வார தேர்தல் பிரச்சாரத்தின் போது இனிகோ இருதயராஜிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் வெற்றி பெற்று சட்டமன்ற சென்றுள்ள இனிகோ இருதயராஜ் திமுக நிர்வாகிகளுடன் திருச்சி வரகனேரி உய்யக்கொண்டான் வாய்க்காலை நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக இரட்டை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றவும், ஆகாயத்தாமரை செடிகளை எடுக்கவும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

உடன் திமுகவின் பகுதி செயலாளர்கள் மண்டி சேகர், மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.