கால அவகாசம் கேட்டு ; எல்ஃபின் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ள அறிவிப்பு !

0
1

திருச்சியில் இயங்கி வரும் எல்ஃபின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் வழக்கறிஞர் பொன் முருகேசன் மூலமாக அறிவித்துள்ள செய்திக் குறிப்பு ;

திருச்சி மாவட்டம் மன்னார்புரம், பழைய எம்பிளாய்மெண்ட் அலுவலகத்தில், இயங்கி வரும் எல்ஃபின் குரூப் ஆப் கம்பெனி சார்பாக அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ள தாங்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் வழக்கறிஞர் அறிவிப்பு யாதெனில் : மேற்படி முகவரியில் இயங்கி வரும் எமது கட்சிகாரரின் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றீர்கள்.

2

தங்கள் அனைவரின் மீதும் நிறுவனத்திற்கு அக்கறையும் , மதிப்பும் மரியாதையும் உண்டு. தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஈவு தொகையை மேற்படி நிறுவனம் மே மாதம் 13 ஆம் தேதி கொடுப்பதாக உறுதி அளித்திருந்தது ஆனால் தற்போது கொரானா பேரிடர் காரணமாக தங்களுக்கு சொன்ன தேதியில் நிறுவனத்தால் கொடுக்க இயலவில்லை என்பதை எமது கட்சிக்காரரின் நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஈவு தொகையை நிறுவனம் கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் கொரானா பேரிடர் காரணமாகவும் , நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய | தொகைகள் சொன்ன நேரத்தில் நிறுவனத்திற்கு வந்து சேராத காரணத்தினாலும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஈவு தொகையை சொன்ன தேதியில் கொடுக்க இயலாமல் கால தாமதம் ஆகின்றது.

4

நிறுவனம் வாடிக்கையாளர்களான தங்களுக்கு கொடுக்க வேண்டிய ஈவு தொகையை கொடுக்க தயாராக உள்ளது உறுப்பினர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் . நிறுவனத்திற்கு வரவேண்டிய தொகைகள் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் வந்துவிடும் . அவ்வாறு வந்த உடன் லாக்டவுன் முடிந்த தேதியில் இருந்து 3 முதல் 6 மாத காலத்திற்குள் தங்களுக்குச் சேர வேண்டிய அனைத்து ஈவு தொகைகளையும் நிறுவனம் கொடுக்க தயாராக உள்ளது என்பதை இந்த வழக்கறிஞர் அறிவிப்பின் மூலம் எல்பின் குரூப் ஆப் கம்பெனி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

அதுவரை உறுப்பினர்கள் யாவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என இந்த வழக்கறிஞர் அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தவறான வதந்திகளை யார் பரப்பினாலும் அதை நம்ப வேண்டாம் . நிறுவனத்தின் மீது வதந்தியை பரப்புவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனத்தின் வழக்கறிஞர் பொன்.முருகேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்