தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் சித்தா புத்துணர்வு மையம் !

0
1

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா கட்டுப்படுத்த நவீன மருத்துவங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய சித்த மருத்துவத்தை கொண்டும் கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 200 படுக்கைகளுடன் சித்தமருத்துவ புத்துணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

இது குறித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது 200 படுக்கைகளுடன் சித்தமருத்துவ புத்துணர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் சித்த மருத்துவத்தை தேடி வரவேண்டும். வந்து கொண்டிருக்கின்றனர். இதில் சத்துள்ள உணவு, இயற்கை மருத்துவம் என்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யோகா, நடைப்பயிற்சி போன்றவை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.


இதுகுறித்து சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் கூறியது, 200 படுக்கைகளுடன் தமிழகத்திலையே முதன் முறையாக திருச்சியில் சித்த மருத்துவ புத்துணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

2

திருச்சி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த வரும் வந்து பயன்பெறலாம். திருச்சியை கொரோனா அற்ற மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம். இங்கு சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் போது மட்டும் நவீன மருத்துவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர் என்று கூறினார்.
இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி மற்றும் சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.