சர்வதேச கபடிப்போட்டியில் தங்கம் வென்ற திருச்சி சிறைத்துறை காவலர்

0
1

 

நேபாள நாட்டில் சர்வதேச அளவில் ஊரக இளைஞர்களுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது.

இதில் இந்திய கபடி அணி நேபாள அணியுடன் இறுதிப் போட்டியில் மோதி 37-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியடைந்து தங்கப்பதக்கம் வென்றது.

2

இந்திய அணியில் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றும் வெங்கடேசன் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். வெங்கடேசன் சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டிணத்தைச் சேர்ந்தவர். தங்கம் வென்ற வெங்கடேசனுக்கு சிறைத்துறை அதிகாரிகள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் அவர் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.