தினம் தினம் அதிரடி காட்டும் திருச்சி திமுக எம்எல்ஏ ; மனு பெற்ற 12 மணி நேரத்தில் தீர்வு !

0
1

திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் இனிகோ இருதயராஜ். இவர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் பேட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றுள்ளார். இந்த நிலையில் இனிகோ வெற்றி பெற்றது முதலே கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் ஆய்வு செய்வது, மக்களின் குறைகளைத் தீர்ப்பது என்று தினம் தினம் ஒவ்வொரு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

 


இவ்வாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியின், முதல்கட்ட தொகையான 2000 ரூபாயை இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட காஜாபேட்டை மற்றும் கேகே நகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கினார் இனிகோ இருதயராஜ்.

2

இது மட்டுமல்லாது கிழக்கு தொகுதிக்குட்பட்ட ரயில்வே விகார் பகுதியில் ட்ரான்ஸ்பாரம் அமைத்து தரக்கோரி அந்த பகுதி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜிடம் நேற்று 14.5.21 இரவு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு இன்று காலை 15.5.21 மின்சார துறை அதிகாரியான எடியோடு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து புதிய ட்ரான்ஸ்பாரம் அமைக்க மின்சாரத் துறையின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனு கொடுத்து 12 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏவின் செயல்பாட்டை பார்த்து மக்கள் நெகிழ்ந்துள்ளனர்.

மேலும் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள சாக்கடைகள் மழைக்காலங்களில் நிரம்பி சுகாதாரப் பிரச்சினை ஏற்படுவதாகவும், சர்க்கடைகள் நிறைந்தது வீட்டிற்குள் தண்ணி வருவதாகவும் பிரச்சாரத்தின் போது மக்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி பணியாளர்களுடன் கலந்து ஆலோசித்தார்.

இதை தொடர்ந்து கொரோனா பேரிடரின் நிதிப் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசிற்கு நன்கொடை வழங்க தமிழக முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் முன்னிலையில் ஜெரால்ட் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இரண்டு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இவ்வாறு தினம் தினம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ். இந்த நிகழ்வுகளில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுபோன்றே ஆய்வு பணி மேற்கொண்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, 5 மணி நேரத்தில் மணிகண்டத்தில் உள்ள சுகாதார நிலையத்தை சரிசெய்தார். இவ்வாறு திருச்சியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.