குழந்தை பிறந்தும் திருமணம் செய்யாததால் பெண் புகார் ; வாலிபர் கைது !

0

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மணி மற்றும் ரம்யா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அதில் ரம்யா கர்ப்பம் அடைந்திருக்கிறார்.

சந்தா 2

கர்ப்பம் அடைந்த நிலையில் இருவரும் மண்ணச்சநல்லூர் பகுதியில் குடியேறி உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதலே மண்ணச்சநல்லூர் வீட்டிற்கு வருவதைக் தவிர்த்துள்ளார் மணி.

மேலும் ரம்யா பல முறை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டும் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இந்தநிலையில் ரம்யாவை மணி தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், ரம்யா ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.