திருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் பறிமுதல்  இருவர் கைது !

0

திருச்சியில் ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை தடுக்க காவல் ஆணையர் அருண் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இவ்வாறு அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

சந்தா 2

இந்த நிலையில் இன்று 13.05.2021 முதலியார் சத்திரம் அருகில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த முதலியார் சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் பாலக்கரையைச் சேர்ந்த காளிமுத்து ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.2,15,000/- மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு இருவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கப்பிரிவு தனிப்படைக் குழுவினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண்  வெகுவாக பாராட்டினார்கள்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.