கோரிக்கை வைத்த மக்கள், உடனடியாக செயல்பட்ட திருச்சி திமுக எம்எல்ஏ ; சுறுசுறுப்பு !

0
1

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட இனிகோ இருதயராஜ் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு பகுதிகளில் மக்கள் பல்வேறு குறைகளை இனிகோ இருதயராஜிடம் முன்வைத்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ள இனிகோ இருதயராஜ் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டு உடனடியாக தொகுதியில் ஆய்வு பணியில் களமிறங்கினார்.

2

மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையிலும் ஆய்வுசெய்து நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

போர் போடும் பணி நடைபெற்று வரும் காட்சி

இதைத்தொடர்ந்து திருச்சி காஜா பேட்டை குடிசைப்பகுதிக்கு சென்ற எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பிரச்சாரத்தின்போது மக்கள் தண்ணீர் பிரச்சினை உள்ளதாக கூறியிருந்தனர். மேலும் இது வெயில் காலம் என்பதாலும் தானும் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளதாலும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் அந்த பகுதிக்கு குடிநீர் கிடைக்க உடனடியாக ஆவணம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் இன்று காஜாபேட்டை குடிசைப் பகுதிக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய போர் போடப்பட்டு வருகிறது.
திமுக எம்எல்ஏவின் இந்த அதிரடி நடவடிக்கையை மக்கள் வரவேற்று உள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.