ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் !

0

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி நேற்று திங்கட்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்தார் ,

அப்போது அவர் கூறியது ; கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

சந்தா 2

மேலும் 200 படிகள் தயார் செய்யப்பட்ட வருகிறது. இது மட்டுமல்லது ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 30 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மணப்பாறை அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு பெரும்பான்மையான படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு மையமாக வருவாய் அலுவலர்கள் நிலையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

‌சந்தா 1

மேலும் கொரோனா பாதிப்பில் உள்ள முதியவர்கள், இணை நோயாளிகளை மட்டுமே காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழந்தோரின் பெரும்பகுதியினர் 70 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரசு பொது மருத்துவமனை தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் ஊர் அடங்கினைப் பின் பற்றி மக்கள் அரசிற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தேவையற்ற காரியங்களுக்கு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.