திருச்சியில் வீட்டில் இருந்த பெண் காவலரின் தாலிச் செயின் பறிப்பு !

0
1

திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் ராஜாமணி. இவரது வீடு காஜாமலை பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் ராஜாமணியின் தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தாயை பார்ப்பதற்காக நவல்பட்டு, வெங்கடேஸ்வரா நகருக்கு சென்றுள்ளார்.

2

இந்த நிலையில் தாயின் இல்லத்தில் தங்கியிருந்த போது, இரவு 2 மணியளவில் வீட்டில் நுழைந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த ராஜாமணியின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை பறித்து தப்பி விட்டார்.

இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.