மின் கட்டணத்தை 31-ஆம் தேதி வரை செலுத்தலாம்: 

0
1

மின் கட்டணத்தை 31-ஆம் தேதி வரை செலுத்தலாம்: 

கொரோனா பரவலை கட்டுப்படுத்து வதற்காக தமிழக அரசு மே 24 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து மின்சார நுகர்வோர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின்நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் (10.5.2021) முதல் (24.5.2021) வரை இருக்குமாயின் , அத்தொகையினை செலுத்த (31.5.2021) வரை மின் துண் டிப்பு, மறு இணைப்புக் கட்டணமின்றி காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2

24.05.2021 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60-வது நாள் இந்தகாலத்தில் இருப்பின் ) மின்கணக்கீடு செய்ய வேண்டிய  மின்நுகர்வோர்கள், மே 2019 ம் ஆண்டில் (கொரோனா இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப் பட்ட தொகையினையே கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் .

புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி அதாவது மார்ச் 2021 ன் கணக்கீட்டுப்படி மின் கட்டணம் செலுத்தலாம் . அதாவது 2021 ற்கான கட்டணம் ஜூலை 2021ல்முறை படுத்தப்படும். மே-2021ற்கான கணக்கீட்டுத் தொகைவிபரம் மின்நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் .

மின்நுகர்வோர்கள் இந்த விபரத்தினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்திலும் (www . tangedco.gov.in ) தெரிந்து கொள்ளலாம் . இத்தகவல் தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.