தேசிய லீக் கட்சி சார்பாக ரம்ஜானை முன்னிட்டு கொரோனா நிவாரண பொருள் வழங்கல் !

0
1

ரம்ஜான் பண்டிகை கொண்டாட பட உள்ளதை அடுத்து திருச்சியில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ரம்ஜான் பரிசு மற்றும் கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் பங்கேற்று மக்களுக்கு பொருட்களை வழங்கினார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் , வரகனேரி திமுக வட்ட செயலாளர் ராஜ்முகமது , அண்ணா சிலை விக்டர் அண்ணன் அவர்கள் , மார்க்கெட் அப்துல் ஹக்கீம் மற்றும் பலர் கலந்து கொண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.