கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்களபணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், திருச்சி வழக்கறிஞர்கள் கோரிக்கை !

0
1

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முன்களப்பணியில் இருந்து விலக்கு அளிக்க தமிழக முதல்வர்க்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முன்களப்பணியில் இருந்து விலக்கு அளிக்க தமிழக முதல்வர்க்கு
பெண் வழக்கறிஞர்களான
பேரண்ட்ஸ் அறக்கட்டளை T.ஜெயந்திராணிBSc,BL,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை
M.சித்ரா B.A.B.L., உள்ளிட்டோர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுவில்,
கொரொனா பெருந்தொற்று பேரிடரால் பாதித்தவர்கள் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மதுரை அனுப்பானடி சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றியவர் சண்முகப் பிரியா. எட்டு மாத கர்ப்பிணியான அவர் கொரோனா தடுப்பு பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக இடைவிடாமல் பணியாற்றியவர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சண்முகப் பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார் டாக்டர் சண்முகப் பிரியா. ஆனாலும் சிகிச்சை பலனின்றி காலமானார்.

2

அவரது நுரையீரலில் பெரும் பகுதி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது தான் மரணத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.அத்துடன் கர்ப்பிணியாக இருந்ததால் கொரோனா தடுப்பூசியையும் சண்முகப் பிரியா போட்டுக் கொள்ள இயலவில்லை. ஓராண்டு காலம் கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளராக பணியாற்றி உயிரை பறிகொடுத்திருக்கும் மருத்துவர் சண்முகப் பிரியாவின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரொனாவால் உயிரை பறிகொடுத்த முன்களப்பணியாளர் கர்ப்பிணி மருத்துவர் போல வேறு யாரும் பாதிக்காத வண்ணம்
முன் களப் பணியாளர்களான கர்ப்பிணி பெண்களை கணக்கெடுத்து அவர்களுக்கு முன் களப்பணியில் இருந்து விலக்கு அளித்து உதவிட தமிழக முதல்வர்க்கு பெண் வழக்கறிஞர்கள்
T.ஜெயந்திராணிBSc,BL,
M.சித்ரா B.A.B.L., உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.