திருச்சியில் எம்ஜிஆர் சிலை உடைப்பு, இதுதான் காரணம் ; கலெக்டர் பேட்டி !

0
1

திருச்சி மரக்கடை பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலை 1995-ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன் மற்றும் நல்லுசாமி அகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் தற்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தின் போது கூட எம்ஜிஆர் சிலையை சுற்றியும் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து தான் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திருச்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

2

இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் காரணமாக எம்ஜிஆர் சிலை மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று எம்ஜிஆர் சிலையின் வலது கை மணிக்கட்டு பகுதிவரை வரை உடைக்கப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது.

மேலும் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதாக கூறி நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி செய்தியாளர்கள் சந்திக்கும்போது கூறியது, சிலை அமைத்து பல ஆண்டுகளாகியுள்ளது, மேலும் தேர்தல் விதிமுறையின் காரணமாக மூடப்பட்ட சிலை, தேர்தல் விதிமுறை முடிந்து திறக்கப்படும்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் கை உடைந்து விட்டது.

மேலும் சிலையை யாரும் சேதப்படுத்தவில்லை, அந்த எம்ஜிஆர் சிலை அரசு செலவில் சீர் செய்யப்படும் என்று கூறினார்.

ஆனால் அதிமுகவினரே சிலையை செய்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.