ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்திற்கு பதிலாக தங்க கருட சேவை

கரோனா பரவல் காரணமாக ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக கடந்த 9ம் தேதி தங்க கருட சேவை நடைபெற்றது.
நம்பெருமாள் கடந்த 9ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 5 மணிக்கு கருட மண்டபம் சேர்ந்தார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் கிளி மாலையுடன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
