திருச்சியில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு,  எஸ்பி ஆய்வு !

0

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள புதுக்குடியில் இயங்கிவரும் இத்தாலி நாட்டின் சால் இந்தியா நிறுவனம் காற்றில் இருந்து 78.9 சதவீதம் நைட்ரஜன், 93 சதவீதம் ஆர்கான் பிரித்தெடுக்கும் பணியையும், மேலும் ஆக்சிஜனையும் உற்பத்தி செய்து வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள் திரவ நிலையிலும், வாயு நிலையிலும் மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும் காரணத்தால் நாளொன்றுக்கு 47 டன் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தற்போது 50 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நேற்று திருச்சி எஸ்பி மயில்வாகனம் ஆய்வு செய்தார். அப்போது உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்துள்ளதர்கு பாராட்டையும், மேலும் உற்பத்தியை மேலும் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.