கோவை சாலையில் கார், பைக்,லாரி மோதல் 2 பேர் பலி

Two killed in car-bike collision on Coimbatore road

0

கரூா் ,க. பரமத்தியை சோ்ந்த செந்தில்குமார் (48). இவா் தனது காரில் தனது உறவினர்களான சீனிவாசன் (49), தினேஷ் (32), பிருந்தா(30) ஆகியோருடன் 7ம் தேதி மாலை கரூா் நோக்கிச் சென்றுகொண்டிந்தார்.

அப்போது கோவை சாலையில் பவித்திரத்தை அடுத்த வானாவிழி அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பவித்திரம்மேடு ராமநாதன் (35) என்பவா் அந்த காரை முந்த முயன்றார்..

சந்தா 2

அந்த நேரம், எதிரே முசிறியில் இருந்து கோவை நோக்கிச் வந்த லாரி மீது இருசக்கர வாகனமும், காரும் மோதின. இதில் ராமநாதனும், செந்தில்குமாரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

‌சந்தா 1

காரில் இருந்த சீனிவாசன், தினேஷ், பிருந்தா மற்றும் லாரி ஓட்டுநரான முசிறியைச் சோ்ந்த துரைசாமி (35), லாரி கிளீனா் க. பரமத்தி மோளப்பாளையம் ராஜேந்திரன் (34) ஆகியோர் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் க.பரமத்தி போலீஸார் காயமடைந்தோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சடலங்களை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.