அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை ; தீவிரமாக நடவடிக்கை எடுக்க உத்தரவு !

0
1

திருச்சி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய அரசு, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை பரிந்துரைத்துள்ளனர் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் திருச்சி மாவட்டம் முழுவதும் செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் முகக் கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை மிகக் கடுமையாக அமல் படுத்தவும், தமிழக அரசு விதித்து உள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவுரை வழங்கினார்.

2

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெய பிரீத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.