3 முத்தரையர்களுக்கு அமைச்சர் பதவி ; முத்தரையர் சங்கம் கோரிக்கை !
திமுக தலைமையிலான அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. முதல்வராக ஸ்டாலினும் மற்றும் இதர அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிலையில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே கே செல்வகுமார் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார், அவர் கூறியது ;
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதற்கு முத்தரையர்களின் வாழ்த்துக்கள். மேலும் முத்தரையர்கள் பெரும்பான்மையானோர் திமுகவிற்கு ஆதரவு அளித்திருக்கின்றனர். அதனாலேயே முத்தரையர்கள் அதிகமுள்ள 60 தொகுதிகளில் திமுக பெருவாரியான இடங்களை பெற்றுள்ளது.
மேலும் சாதி பிரதிநிதித்துவ அடிப்படையில் திமுகவில் எம்எல்ஏவாக உள்ள நான்கு முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.