ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சா பறிமுதல் ; திருச்சி போலீஸ் அதிரடி !

0

ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு லாரி மூலம் கடத்திவரப்பட்ட கஞ்சா துறையூர் வழியாக செல்வதாக திருச்சி மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் டிஎஸ்பி காமராஜ், இன்ஸ்பெக்டர் கலைவாணி, சிறப்பு எஸ்ஐ வெங்கடேசன், சத்தியமூர்த்தி, விஸ்வநாதன் மற்றும் காவலர் சலீம், சாமிநாதன் உள்ளிட்டோர் துறையூர் – முசிறி ரவுண்டானாம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தா 2

அந்த சமயத்தில் சந்தேகத்திற்கிடமான லாரியில் பரிசோதனை செய்ததில் மூட்டையில் வைக்கப்பட்டிருந்த 66 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

‌சந்தா 1

மேலும் இதன் மதிப்பு 6.50 லட்சம் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த ஈஸ்வரன், பாண்டீஸ்வரன், விமல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.