திருச்சியில் கார் உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ

0

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள கார்  உதிரிபாகங்கள் விற்பனை கடையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்க, நிலைய அலுவலர் மெல்கி ராஜா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அருகிலிருந்த பேக்கரி உள்ளிட்ட பிற கடைகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் கார் உதிரிபாகங்கள் கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பேக்கரியில் உள்ள பொருட்கள் தீயில் கருகின.

கார் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட மின்கசிவே இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.