திருச்சியில் 34 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ; புதிய அரசு பரிந்துரை !

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை தமிழகத்தில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றிய 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய, உயரதிகாரிகளுக்கு மு க ஸ்டாலின் பரிந்துரை செய்வதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 34 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். இவர்கள் மாதம் 15,000 ரூபாய் என்று ஊதியம் வாங்கிய நிலையில் இருந்து, தற்போது 40 ஆயிரமாக அந்த ஊதியம் வாங்க உள்ளனர்.
