இனாம் குளத்தூர் அதிமுக பிரமுகருக்கு அடி உதை:

0

இனாம் குளத்தூர் அதிமுக பிரமுகருக்கு அடி உதை:

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர், அருகே உள்ள பெரிய ஆலம்பட்டியை சேர்ந்தவர் அதிமுக கிளைச் செயலாளர் பச்சைமுத்து.

food

இவரின் வீட்டிற்கு எதிரே உள்ள திமுக நிர்வாகி சார்லஸ் திமுக வெற்றி பெற்றதை நண்பருடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார். தகவலறிந்த வந்த காவல்துறையினர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அதிமுக கிளை செயலாளரான பச்சைமுத்து அளித்த புகாரின் பேரில் தான் போலீசார் வந்ததாக கூறி திமுக நிர்வாகி சார்லஸ் மற்றும் அவரது நண்பர்கள் பச்சைமுத்து உடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பச்சைமுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் இனாம் குளத்தூர் போலீசார் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.