தமிழ்வழியில் படித்த இளைஞர்களுக்கு வேலை பெற்றுத் தரப்படும்: இனிகோ இருதயராஜ் பேட்டி:

0
1

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், வெற்றி சான்றிதழை பெற்றார்.  பின்னர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது :

என் மீது நம்பிக்கை வைத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . எனது, வெற்றிக்கு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு , மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் முக்கியபங்காற்றினர் .

எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறேன். வேலைதேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். குறிப்பாக தமிழ் வழியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல் படுத்தப்படும்

2

சீரழிந்த திருச்சி கிழக்கு தொகுதியை , சீர்மீகு திருச்சியாக மாற்ற , முதல் – அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி அனைத்து திட்டங்களையும் திருச்சிக்கு கொண்டு வந்து தொகுதியை மேம்படுத்துவேன் . திருச்சி மாநகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது . திட்டமிடாத செயல்களால் இதுபோன்று நகரமே சுகாதாரக் கேடாக உள்ளது . எனவே , சுகாதாரமான திருச்சியை உருவாக்குவதே எனது நோக்கம் என கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.