காகிதத்தில் ஜிமிக்கி கம்மல்! காதணிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் தனிரகம்!

பயிற்சி அளித்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்!

0
1
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் காகிதத்தில் ஜிமிக்கி கம்மல் காதணிகள் தயாரிப்பது குறித்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. காதணிகள் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கூறுகையில்,
காதணிகள் அல்லது தோடு (earring) காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. இரு பாலினத்தாலும் அணியப்படுகின்றன, இருப்பினும் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவானவை, மற்றும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாகரிகங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்கள் அணியும் தோடு கடுக்கன் எனப்படுகிறது. காதுச் சோணையில் துவாரமிட்டே தோடு அணியப்படுகிறது. உலோகம், நெகிழி, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது. தமிழர் உட்பட பல இனத்தவரால் பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே காது குத்தப்பட்டுத் தோடு அணிவிக்கப்படுகிறது. இதனை ஒரு சடங்காகவும் கொண்டாடுவதுண்டு. திருமணத்தின்போது ஆணுக்குக் கடுக்கன் பூட்டும் வழக்கம் சில பிரதேசத் தமிழர் திருமணங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அவ் வழக்கம் அருகிவிட்டது.
“காது குத்துதல்” என்ற எளிய சொல் பொதுவாக ஒரு காதுகுத்து துளையிடுவதைக் குறிக்கிறது, அதேசமயம் வெளிப்புறக் காதுகளின் மேல் பகுதியில் குத்துதல் பெரும்பாலும் ” குருத்தெலும்பு துளைத்தல்” என்று குறிப்பிடப்படுகிறது. குருத்தெலும்பு குத்துதல் காதுகுத்து துளையிடுவதை விட நிகழ்த்துவது மிகவும் சிக்கலானது மற்றும் குணமடைய அதிக நேரம் எடுக்கும்.உலோகம், நெகிழி, கண்ணாடி, விலைமதிப்பற்ற கல், மணிகள், மரம், எலும்பு மற்றும் பிற பொருட்கள் உட்பட பலப் பொருட்களாலும் காதணி கூறுகள் தயாரிக்கப்படுகின்றன. ஏழை முதல் பணம் படைத்த பெண் வரை அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப தோடுடையவர் தான். கல் கம்மல், தொங்கட்டான், ஜிமிக்கி, காது வளையம் என இன்னும் விதவிதமாக கம்மல் வகைகள் உண்டு. ஆடைகளின் நிறத்திற்கேற்ப கம்மல்கள் அணியும் பெண்கள் உண்டு. காதணிகளின் டிசைன்களின் அடிப்படையில் வகைப்படுத்துவதுப் போல, காதணிகளை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அடிப்படையில் கூட வகைப்படுத்தலாம்.
காதணிகள் தங்கம், வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட வை (covering studs), பிளாட்டினம், டைட்டானியம், நிக்கல் என உலோகங்கள் மூலம் செய்யப்படும் நகைகளும் பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது. எதிலும் வித்தியாசத்தை விரும்புபவர்களுக்காகவே நினைத்து பார்க்காத பொருட்கள் கொண்டு காதணிகளை செய்கிறார்கள் அதற்கு இளம்பெண்கள் மட்டுமன்றி அனைவரிடமும் வரவேற்பு இருக்கிறது.
காதணிகளை உலோகங்கள் மட்டுமின்றி பிற பொருட்களை கொண்டு உதாரணமாக சிப்பிகள், விலங்குகளின் தோல், முடி, பல், தந்தம், முள்ளம்பன்றி முள், பறவைகளின் இறகுகள், பட்டு நூல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட காதணிகளைப்பற்றி நாம் ஏற்கெனவே அறிவோம்.
சில ஆண்டுகளாக வித்யாசமான தேடல்களுடன் படைப்பாளிகள் காதணிகள் உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று உள்ளனர். தாய்ப்பாலில் காதணிகள் ,டெரகோட்டா காதணிகள், காகிதத்தில் காதணிகள் (Quilling Earrings) Acid free வகை quilling செய்ய உதவும் காகிதத்தில் க்விலிங் வடிவங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட காதணிகள், நகைகள் கூட இளம்பெண்களின் பெரும் ஆதரவுடன் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது என்றார்.
3

Leave A Reply

Your email address will not be published.