திருச்சி அருகே இன்ஸ்பெக்டருக்கு கொரோனா:

0
1

திருச்சி அருகே இன்ஸ்பெக்டருக்கு கொரோனா:

திருச்சி மண்ணச்சநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல், சளி, உள்ளிட்ட அறிவுரைகள் இருந்தன. இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் உத்தரவின்படி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் படுத்தினர்.

2

மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சமயபுரம் காவல் நிலையம் மற்றும் சிறுகனூர் காவல் நிலையத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையம் முன்பு கயிறு கட்டி தடுப்பு வேலி அமைத்துள்ளனர். மேலும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.