ஜெயித்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் அதிமுக முக்கிய புள்ளி ?

0
1

அதிமுகவின் முக்கிய புள்ளிகளாக கருதப்படுபவர்கள் கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம், இருவருமே அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ஆவர். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் தோல்வியுற்றார். இதனால் முன்னாள் அமைச்சரான வைத்தியலிங்கத்திற்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது.

வேப்பனஹள்ளி கே.பி. முனுசாமி

மேலும் கே.பி. முனுசாமி 2019ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தோல்வி அடைந்தார். இதனால் கே.பி. முனுசாமிக்கும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது.

2

இந்த நிலையில் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும் மாநிலங்களவை எம்பி ஆகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரத்தநாடு, வைத்தியலிங்கம்

அப்படி இருந்தும் தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவுகளோடு இரண்டு பேருமே எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட்டனர்.

முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வேட்பாளராக பட்டனர். இந்த நிலையில் இருவருமே வெற்றி பெற்று சட்டமன்றம் செல்கின்றனர். இதே சமயம் இருவருமே ராஜ்யசபா எம்பியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் யார் எந்த பதவியை ராஜினாமா செய்வது என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.

அதே சமயத்தில் வைத்தியத்திற்கு அடுத்த வருடம் 2022 ஆம் ஆண்டோடு எம்பி பதவி முடிவடைகிறது. அதனால் வைத்தியலிங்கம் ஒரு வருடம் இருக்கக்கூடிய எம்பி பதவிக்காக 5 வருடம் இருக்கக்கூடிய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய விரும்ப மாட்டார். இதன் காரணமாக எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

மற்றொருபுறம் கே.பி.முனுசாமிக்கு இன்னும் ஐந்து வருடம் எம்பி பதவிகள் உள்ளதால், தற்போது வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.