திருச்சியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ?
திருச்சி மேற்கு தொகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர், திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு போட்டியிட்டார். இதனால் இது விஐபி தொகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவில் கே என் நேரு திமுக 1,12,515, பத்மநாபன் அதிமுக 31, 588, வினோத் நாம் தமிழர் கட்சி 15,595, அபூபக்கர் சித்திக் மக்கள் நீதி மையம் 10,161, அப்துல் ஹசன் எஸ்டிபிஐ 2,464 இவ்வாறு வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதில் திமுக வேட்பாளர் கே என் நேரு, அதிமுக வேட்பாளரை விட 80 ஆயிரத்து 588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக உள்ளார் நேரு.