சுஜாதாவின் பிறந்த நாள் இன்று.(மே 3).

0

சுஜாதா திருச்சியை சேர்ந்தவர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.

இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் வாசகர்களின் மனதை கவர்ந்தவர்.

அவரின் முதல் கதை  1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை தாய் மொழியான தமிழில் முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

food

பின்னர் 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் பணியாற்றினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இருந்தவர். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இதனை உருவாக்கியதற்காக வாஸ்விக் விருது அவருக்கு வழங்கப்பட்டது.  தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும், ஆனந்த தாண்டவம் ஆகியன திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

இவர் பணியாற்றிய திரைப்படங்கள் – ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி த பாஸ், வரலாறு (திரைப்படம்), செல்லமே.

gif 4

Leave A Reply

Your email address will not be published.