ஸ்ரீரங்கம் ; 96-க்கு பிறகு 21-யில் தான் வெற்றி !
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டது. 1996 க்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி 1 லட்சத்து 13 ஆயிரத்து 539 வாக்குகள், கு.ப.கிருஷ்ணன் அதிமுக 93 ஆயிரத்து 776 வாக்கு, நாம் தமிழர் செல்வராதி 17 ஆயிரத்து 870 வாக்கு, சாருபாலா தொண்டைமான் அமமுக 3485 வாக்கு, பிரன்ஸ் மேரி ஐஜேகே 1060 வாக்கு, இவ்வாறு வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் பழனியாண்டி, அதிமுக வேட்பாளர்களை 19 ஆயிரத்து 763 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.