திருவெரம்பூர் யாருக்கு எவ்வளவு ஓட்டு !
திருவெறும்பூர் தொகுதியில் திமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிமுகவின் மாவட்டச் செயலாளரான குமாரும் போட்டியிட்டனர். இருவரும் தொகுதியில் நன்கு அறிமுகமானவர் களாக இருந்தனர். ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1 லட்சத்து 5 ஆயிரத்து 474 ஓட்டுகள், குமார் அதிமுக 55 ஆயிரத்து 727, சோலைசூரன் நாம் தமிழர் கட்சி 15718, முருகானந்தம் மக்கள் நீதி மையம் 16688, செந்தில்குமார் தேமுதிக 2293 இவ்வாறு பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிமுக வேட்பாளரை விட 49 ஆயிரத்து 697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.