திருச்சியில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு :

0

கொரொனா பெருந்தொற்று காலங்களில் நம்மை காக்க வீட்டை காக்க நாட்டை காக்க முகக்கவசம் உயிர்க் கவசம் அனைவரும் அணிந்து
ஆரோக்கியம் காக்க வேண்டுகோள்

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, இணைந்த கரங்கள் மாற்று திறனாளிகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை அமைப்பு கொரொனா பெருந்தொற்று காலங்களில்
முகக்கவசம் உயிர்க் கவசம் விழிப்புணர்வு நிகழ்வினை திருச்சி, புத்தூர் பகுதியில் நடத்தியது.

இணைந்த கரங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை அமைப்பு தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வடிவேல், செயலர் பாலசுப்ரமணியன், துணைச் செயலர் ராகவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

food

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மாற்று திறனாளிகளுக்கு முகக்கவசம் வழங்கி பேசுகையில்,
வீட்டை விட்டு வெளியே பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் முகக்கவசத்தை தவறாமல் அணியவேண்டும். காரணம், கொரோனா வைரஸ் பரவும் விதம்தான். இருமல், தும்மல் போன்றவற்றால் வெளிப்படும் நீர்திவலைகளில் உள்ள வைரஸ் வெளிப்பட்டு மற்றவர்களை தொற்றும் . மூச்சு விடுதலில் வெளிப்படும் நுண்வைரஸ் துகள்கள் மூலமாகவும் வைரஸ் பரவும் என்று தற்போது தெரியவந்துள்ளது.

ஐந்து மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள இந்த வைரஸ் காற்றில் பல மணிநேரம் மிதக்கக்கூடியது என்றும் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை பெரிதும் தவிர்க்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு சார்ஸ் பரவியபோது எடுத்த ஆய்வின்படி கைகழுவுவதன் மூலம் 55 சதவிகிதம் அளவுக்கு தொற்றை தவிர்க்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கையுறைகளை அணிவதன் மூலம் 57 சதவிகிதமும், முகக்கவசம் அணிவதன் மூலம் 68 சதவிகிதமும் தொற்றை தவிர்க்கலாம் என்று தெரியவந்தது.

துணிகள் 40 சதவிகிதம் அளவுக்கு தொற்றை தவிர்க்க உதவும் வியர்வை உறிஞ்சும் துணிவகைகள் மூலம் 20 முதல் 40 சதவிகிதமும், ஸ்கார்ப் வகை துணிகள் மூலம் 10 முதல் 20 சதவிகிதமும், டி ஷர்ட் வகை துணிகள் மூலம் 10 சதவிகிதம் அளவுக்கும் தொற்றை தடுக்க முடியும். அனைவருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவைப்படும் முகக்கவசம் அவசியமல்ல என்பதால், நமக்கு நாமே முகக்கவசத்தை தயாரித்து தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி,
ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்றார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.