திருச்சி அருகே போலி கிளினிக்குக்கு சீல் வைப்பு:

0

திருச்சி அருகே போலி கிளினிக்குக்கு சீல் வைப்பு:

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்தவர் ராகவன் (48). இவர் பூலாங்குடி பகுதியில் மெடிக்கல் மற்றும் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எம்.பி.பி.எஸ் படிக்காமலே போலி மருத்துவம் பார்ப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் பேரில் நேற்று  (30/04/2021) மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் லட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சந்தா 2

இச்சோதனையில் மருத்துவம் பார்த்ததாக கூறப்படும் அறையில் மருத்துவ உபகரணங்கள் எதுவுமில்லை மேலும் ராகவனும் தான் மருத்துவம் பார்ப்பது இல்லை என மறுத்துள்ளார்.

‌சந்தா 1

இதனையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மருத்துவம் பார்த்ததாக கூறப்படும் அறையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.