கபசுரக் குடிநீர் உடன் மே தின கொடியேற்றிய கம்யூனிஸ்ட் !

0

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் சமூக இடைவெளியை பின்பற்றி கொடிகள் ஏற்றப்பட்டன.

மேலும் திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பாக நந்தி கோயில் தெரு அருகே ஏஐடியூசி தொழிற்சங்கம் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிபிஐ மாவட்ட செயலாளர் திராவிடமணி, சுரேஷ், அண்ணாதுரை, சிவா, ஆன்சர் தீன், இப்ராஹிம், ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.