திருச்சியில் வழிப்பறி கும்பல் கைது

Gang arrested in Trichy

0
1

திருச்சி மாநகரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 போ் கொண்ட கும்பலை கண்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனா்.

2

திருச்சி மாவட்டம், அரியாவூா் ,சேதுராப்பட்டியைச் சோ்ந்த கார் ஓட்டுநர் சிவஞானம் (35). கடந்த 26ம் தேதி இரவு அரிஸ்டோ மேம்பாலம் அருகே  4 போ் கொண்ட கும்பல் இவர் வைத்திருந்த ரூ. 2500ஐ மிரட்டிப் பறித்துச் சென்றது. உடன் அவர் கண்டோன்மென்ட் போலீஸாரிடம் புகார் அளிக்க சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ரயில்வே தண்டவாளப் பகுதியில் நின்றிருந்த வழிப்பறி கும்பலைப் பிடிக்க முயல திருவெறும்பூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (28) மட்டுமே பிடிபட்டார். மற்ற மூவரும் தப்பினா்.

இதைத் தொடா்ந்து தலைமறைவாக இருந்த சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ் (28), திருச்சி கருமண்டம் பாபு (27), நாகமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(28) ஆகிய மூவரையும் போலீஸார் 28ம் தேதி  கைது செய்து சிறையிலடைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்