வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்று? .. திருச்சியின் 9 தொகுதிகளின் முழு விபரம்..

0

திருச்சியில் உள்ள 9 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி 3292 வாக்கு மையங்களில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. திருச்சி கிழக்கு மேற்கு தொகுதி வாக்கு பதிவு எந்திரங்கள் ஜமால் முகமது கல்லுாரியிலும், திருச்சி திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் வாக்கு பதிவு எந்திரங்கள் சாரநாதன் பொறியியல் கல்லுாரியிலும், துறையூர், முசிறி வாக்கு பதிவு எந்திரங்கள் துறையூர் இமயம் கல்லுாரியிலும், மண்ணச்சநல்லுார், லால்குடி சட்ட மன்ற வாக்கு பதிவு எந்திரங்கள் சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியிலும் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 டேபிள்கள் போடப்பட்டு உள்ளது.

food

மணப்பாறை 30 சுற்றுகள்
ஸ்ரீரங்கம் 32 சுற்றுகள்
திருச்சி மேற்கு 28 சுற்றுகள்
திருச்சி கிழக்கு 27 சுற்றுகள்
திருவெறும்பூர் 30 சுற்றுகள்
இலால்குடி 22 சுற்றுகள்
மண்ணச்சநல்லுார் 25 சுற்றுகள்
முசிறி 24 சுற்றுகள்
துறையூர் 23 சுற்றுகள் என
மொத்தம் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகள்
நடைபெறவுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான
திவ்யதர்ஷினி தொிவித்து உள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.