நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து திருச்சி மாநகராட்சி அட்வைஸ் !

0

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தா 2

இந்த நிலையில் திருச்சியில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் உடன் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அப்போது, திருமண மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சியில் 50 பேர் மட்டும் பங்கேற்பதை மண்டப நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைவருக்கும் வெப்பம் பரிசோதித்து முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து நிகழ்ச்சிகள் நடத்த நிர்வாகங்கள் மாநகராட்சிக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடத்தும் சுப நிகழ்ச்சிகள் குறித்து மாநகராட்சிக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டுமென்று கூறினார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.