தனிமைப்படுத்தும் முகாமாக மாறியது யாத்ரி நிவாஸ் !

0

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் திருச்சி மாவட்ட நிர்வாகம் படுக்கைகளை அதிகப்படுத்தும் விதமாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 630 படுக்கைகள் அமைத்து சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் காஜாமலை 160 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

food

இந்த நிலையில் திருச்சி மாநகர பகுதிகளில் மேலும் படுக்கை வசதியை அதிகப்படுத்தும் விதமாக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் 480 பேர் பேருக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தனிமைப் படுத்தும் முகமாக ஏப்ரல் 28 இன்று முதல் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமை நேற்று ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் விசுவநாதன் பார்வையிட்டார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.