தேர்தல் நடத்தும் அலுவலருடன் வேட்பாளர் மறைமுக சந்திப்பு ; திருச்சி திமுக புகார் !

0
1

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் யாரும் இல்லாத நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனை அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தனிப்பட்ட முறையில் சந்தித்து உள்ளார்.இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தபால் வாக்குப்பெட்டி சீலிடப்படாத நிலையில் நடைபெற்ற இந்த தனிப்பட்ட சந்திப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் புகார் மனு அளித்தார்.

உடன் பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர், பாலமுருகன், வழக்கறிஞர் கண்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.