மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது !
கருமண்டபம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார்.
திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் கருமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது போலீசை கண்டு கணேசமூர்த்தி வண்டியை திருப்பி சென்றுள்ளார்.
சந்தேகம் அடைந்த காவல்துறையினர் துரத்திச் சென்று பிடிக்கையில், அவரிடமிருந்து சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணேசமூர்த்தி கைது செய்தனர்.
இவர் இரவு நேரங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.