ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் முன்மாதிரிகள்!!!

0

ஒரு முறை ஒரு தந்தை தனது ஏழு வயது பையனை விளையாட்டு அரங்கிற்கு அழைத்து சென்றார் , நுழைவு சீட்டின் விலையை கவுண்டரில் கேட்டறிந்தார். பெரியவர்கள் என்றால் இருபது ரூபாய் ஆறு வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பத்து ரூபாய் என்று தெரிவித்தார்கள்.   தந்தை இரண்டு பெரியவருக்கான நுழைவு சீட்டை தருமாறு கவுன்டரில் கேட்டார்.

கவுண்டரில் இருந்த டிக்கெட் கொடுக்கும்  கிளார்க் பையனின் உயரத்தை பார்த்துவிட்டு  ஒரு முழு டிக்கட் ஒரு  அரை டிக்கட் வாங்கினால் போதும் என்றார்.  பையனுக்கு ஆறு வயது என்று கூறினால் ஒன்றரை டிக்கேட் வாங்கினால் போதும் என்றார். இல்லை என்றால் இரண்டு வாங்க வேண்டும் என்றார்.

அந்த பையனின் தந்தையோ இரண்டு முழு டிக்கட் கொடுங்கள் என்றார்.

நீங்கள் பையனுக்கு ஆறு வயது என்று சொல்லியிருந்தால்  பத்து ரூபாய் மிச்சமாகுமே ஏன் இரண்டு முழு டிக்கட் வாங்குகிறீர்கள் ஒன்றரை டிக்கெட் வாங்கியிருக்கலாமே  என்று டிக்கெட் வழங்கியவர் கேட்டார்.

அதற்கு அந்த தந்தையோ பத்து ரூபாய் மிச்சம் தான். ஆனால் என் பையன்  நம்ம அப்பா பத்து ரூபாய்க்காக பொய் சொல்லுகிறார்  என்று  எண்ணுவான் என்றார்.

பணம் சம்பாதித்துவிடலாம்.  ஆனால் அப்பாவை பற்றிய எண்ணம் தவறாக அவன் மனதில் பதிந்துவிட்டால்  அது நீங்காத தழும்பாக மாறிவிடும்.

அவனும் பொய் சொல்வதில் தவறேதுமில்லை என்று எண்ண தொடங்குவான்  லாபம்  கிடைக்குமானால் பொய் சொல்வது கூட தவறில்லை என்ற  தவறான எண்ணம் அவன் மனதில் வேரூன்றிவிடும். எனவே வேண்டாம்   என்றார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லாமல் தாங்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினால் தான் குழந்தைகளும்  அவ்வாறே அப்பண்புகளை வளர்த்து கொள்ளுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.