நாளை திருச்சி புறநகர் பகுதியில் மின் வெட்டு !

0

அதவத்தூர் துணைமின் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய மின்னழுத்த கம்பிகள் அதிக செயல் திறன் கொண்ட மின் கம்பிகளாக மாற்றும் பணி நடைபெறுவதால் நாளை ஏப்ரல்28  குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அதவத்தூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

சந்தா 2

இவ்வாறு நாளை இனியனூர், அல்லிதுறை, போதாவூர், கீழ வயலூர், சுண்ணாம்புக்காரன்ப்பட்டி, சோமரசம்பேட்டை, சந்தாபுரம், தாயனூர், அதவத்தூர் சந்தை, புலியூர், கொய்யாத்தோப்பு, எட்டரை, குழுமணி, மல்லியம்பத்து, கோப்பு, மேலப்பட்டி, அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், பேரூர்,முல்லி கரும்பூர், போசம்படி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.