திருச்சி மாநகராட்சியில் வரிகள் உயர்வு !

0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள், நிறுவனங்கள் என்று அனைத்து வகையான கட்டிடங்களுக்கும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

food

இந்த கட்டண உயர்வு இந்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்றும் இதுகுறித்து தகவல் பொதுமக்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் கட்டணம் மாதம் ரூபாய் 20 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்றும் பாதாளச் சாக்கடைக்கான கட்டணம் 500 சதுர அடி கொண்ட வீட்டிற்கு ஒரு கட்டணமும், 1000 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு கட்டணமும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.