ஆன்லைன் செயல்பாட்டால் பணியில் சுணக்கம் ; ஏஐடியுசி தொழிற் சங்கம் கோரிக்கை !

0

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.நேரில் கொண்டு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சொல்லப்பட்ட நடைமுறைகள் மற்றும் இணையதள வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளால் பதிவு செய்யப்படும் மனுக்கள் நூற்றுக்கணக்கில் தேங்கிக் கிடக்கிறது.

சந்தா 2

மேலும் கல்வி, திருமணம், இறப்பு, ஓய்வூதிய விண்ணப்பங்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருச்சி தொழிலாளர் அலுவலர் சமூக பாதுகாப்பு திட்டம் செங்குளம் காலனி மன்னார்புரம் அலுவலகத்திற்கு பதிவு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கப்படுபவை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சரிபார்ப்பு சான்றுக்காக பரிந்துரைக்கு அனுப்பப்படுவைகள் 2021 ஜனவரி முதல் தேக்கம் அடைந்துள்ளன.
இதனால் தொழிலாளர்கள் உரிய அடையாள அட்டை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அமைப்புசாரா நல வாரியத்தில் பல பிரச்சினைகள் உள்ளதால் இதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் இயங்கும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை விரைவில் கூட்டி விவாதித்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று ஏஐடியுசி தொழிற் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.