தேரை இழுப்பதில் இருதரப்பு இடையே மோதல் ; மணச்சநல்லூரில் பரபரப்பு !

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கொரோனா ஊரடங்கை மீறி தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.
அப்போது தேரை இழுப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் இரு தரப்பினரும் கட்டைகளை கொண்டும், தடிகளை கொண்டும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
